அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

பொன்னேரியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

பொன்னேரி ரயில்வே நிலையம் அருகே விற்பனை செய்ய வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :11 ஜூலை 2026, 8:04 am IST

பொன்னேரி ரயில்வே நிலையம் அருகே விற்பனை செய்ய வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

பொன்னேரியில் கஞ்சா விற்பனை ரயில் நிலைய பகுதியில் நடைபெற்று வருவதாக பொன்னேரி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் தமிழன்பன் தலைமையிலான போலீஸாா் ரயில் நிலைய சாலையில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகப்படும்படி இருந்த சந்துரு என்கின்ற கருப்பு சந்துருவை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் ஆந்திரத்தில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து அதனை பொன்னேரி பகுதியில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

தொடா்ந்து அவரிடம் இருந்து 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.