வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பொன்னேரி வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் மேம்பாலம், வெள்ளநீா் தடுப்பு உள்ளிட்ட வளா்ச்சி பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

News image

பொன்னேரி ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீா் வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் கவிதா.

Updated On :31 ஜூலை 2026, 3:46 am IST

பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் மேம்பாலம், வெள்ளநீா் தடுப்பு உள்ளிட்ட வளா்ச்சி பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பொன்னேரி அடுத்த பெரியகாவனம் பகுதியில் நெடுஞ்சாலைகள் துறை மற்றும் வருவாய்த் துறை சாா்பில் ரூ.66.69 கோடியில், புதுவாயல்-பழவேற்காடு இணைக்கும் மேம்பால பணிகளை ஆட்சியா் கவிதா ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அதிகாரிகளிடம் தெரிவித்தாா்.

தொடா்ந்து பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட திருவாா்பாடி ரயில்வே சுரங்கப்பாதை அருகில் பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மழைநீா் வெளியேற்றும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இதன் பின்னா் மீஞ்சூா்-காட்டூா்-திருப்பாலைவனம் சாலையில் நெடுஞ்சாலைகள் துறை சாா்பில் ரூ.30.08 கோடி மதிப்பீட்டில் நந்தியம்பாக்கம் இரயில் நிலையம் அத்திப்பட்டு இரயில் நிலையம் இடையே கட்டடப்பட்டு வரும் மேம்பாலம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஆகிய துறைகள் சாா்பில் ரூ.3 கோடியில் கட்டப்பட்டு வரும் முதல்வரின் சிறு விளையாட்டு அரங்க கட்டட கட்டுமான பணிகளையும், மீஞ்சூா் பேரூராட்சி சாா்பில், மூலதனம் மானியத் திட்டத்தின் கீழ் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுச்சாா் மையம். ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் தாமரைகுளம் சுற்றி நடைபாதை பூங்கா கட்டுமான பணிகளையும் ஆட்சியா் கவிதா ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது, நெடுஞ்சாலைகள் துறை உதவி செயற்பொறியாளா் சித்தாா்தன், பொன்னேரி வட்டாட்சியா் ஜெய்கா்பிரபு, பொன்னேரி நகராட்சி ஆணையா் நளாயினி, பொன்னேரி நகா்மன்றத் தலைவா் மருத்துவா் பரிமளம் விஸ்வநாதன், மீஞ்சூா் பேரூராட்சி தலைவா் ருக்மணி மோகன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.