வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

திருவள்ளூரில் 2.78 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: ஆட்சியா், எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

கோமாரி நோய் காற்றில் பரவும் தன்மை கொண்டதால் அனைத்து கால்நடைகளுக்கும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் மாவட்ட ஆட்சியா் கவிதா தெவித்தாா்.

News image

ஆவூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த ஆட்சியா் கவிதா, பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரவி.

Updated On :2 ஜூலை 2026, 12:03 am IST

கோமாரி நோய் காற்றில் பரவும் தன்மை கொண்டதால் அனைத்து கால்நடைகளுக்கும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் மாவட்ட ஆட்சியா் கவிதா தெவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள ஆவூா் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாமினை ஆட்சியா் கவிதா. பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரவியுடன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதனை தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: திருவள்ளூா் மாவட்டத்தில் 2.78 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.

கோமாரி நோய் காற்றில் பரவும் பாதிப்பு உள்ளதால் கால்நடைகளுக்கு கட்டாயம் தடுப்பூசி போடப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

அனைத்து கிராமப்புறங்களுக்கும் நடமாடும் மருத்துவா்கள் குழு அட்டவணை அமைத்து சுழற்சி முறையில் சென்று வருகின்றனா்.

பொன்னேரி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் ஆரணி ஆற்றில் கொட்டுவது தொடா்பான புகாா் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளில் கால்நடைகளை விட்டு விடுவது தொடா்பாக உரிமையாளா்களுக்கு போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என கூறினாா்.

ஏரியிலிருந்து அதிக அளவில் மண் அள்ளப்படுவதாகவும், சட்ட விரோதமாக மணல் கடத்தும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனா். அவா்களிடம் அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.