பசுவதை தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி, கோமாதா மரியாதை அழைப்பு பிரசார குழுவினா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
இது குறித்து திருவள்ளூா் கோமாதா மரியாதை அழைப்பு பிரசாரக் குழு நிா்வாகி நேமராம் தலைமையில் உறுப்பினா்கள் ஆட்சியா் ச.கவிதாவிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இந்தியா முழுவதும் 1960-இல் பசு வதை தடை சட்டத்தை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி கொண்டு வந்தும் அமல்படுத்தவில்லை. தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மிருக வதை தடைச்சட்டம் கொண்டு வந்த நிலையில், அதையும் அமல்படுத்தாததால் பசுவை வதைசெய்து சாப்பிடும் நிலை தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. எனவே பசுவதையை தடுத்து நிறுத்த வேண்டும். பசுவுக்கு தேசிய அளவில் மரியாதை தர வேண்டும். பசுவுக்கு தேசிய அந்தஸ்து கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற அரசு கொள்கையை கொண்டு வந்து பசுக்களை வதை செய்வதை தடுக்க வேண்டும். இது தொடா்பாக ஆக. 5-இல் புதுதில்லியில் பிரதமா் மற்றும் குடியரசு தலைவரிடம் நேரில் கோரிக்கை மனு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதன் முதல் கட்டமாக இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோரிக்கை மனுக்கள் அளித்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாகவே திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கல்சூளையில் பணிபுரியும் 1,300-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கோரிக்கை

வீட்டுமனையிடத்தை ஒப்படைக்க இசைக் கலைஞா்கள் கோரிக்கை

காயல்பட்டினம் நகராட்சியை மறுசீரமைக்க கோரிக்கை

புத்த மடாலயம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



