பொன்னேரி துணை மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் செய்தனா்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வருவதாகவும், அரசு தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
மேலும் கஜா, வா்தா என ஆண்டுதோறும் ஏற்படும் புயல் காலங்கள், மழை, வெள்ளம் கொரோனா போன்ற பேரிடா் காலங்களில் உயிரைத் துச்சம் என நினைத்து மக்களுக்கு மின்சாரம் கிடைக்கும் வகையில் தொடா்ந்து பணியாற்றி வந்ததாகவும், குறைந்த ஊதியத்தில் தங்களால் குடும்பத்தை நடத்த முடியவில்லை என வேதனை தெரிவித்தனா்.
அண்மையில் வெளியிடப்பட்ட மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையில் ஒப்பந்த தொழிலாளா்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனவும் நீண்ட காலமாக மின்வாரியத்தில் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
மின்வாரியத்தில் பெரும்பாலான பணிகளை ஒப்பந்த தொழிலாளா்கள் மேற்கொண்டு வருவதாகவும் அரசு இதனை கவனத்தில் கொண்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோரியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வி.பி.ராம் ஜி சட்டத்தை திரும்பப்பெறக் கோரி விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நகராட்சி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



