மன்னாா்குடியில், நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி, புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னாா்குடி நகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா் சங்கம் (ஏஐடியுசி) சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணி தொழிலாளா் சங்கத் தலைவா் என். தனிக்கொடி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஐ ஒன்றியச் செயலாளா் துரை. அருள்ராஜன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளா் கலைச்செல்வன், நகரச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏஐடியூசி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

குன்னூா் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

நகராட்சி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



