ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கும்மிடிப்பூண்டியில் நீதிமன்றம் புறக்கணிப்பு

கும்மிடிப்பூண்டி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சம்பத் மீது கவரப்பேட்டை போலீஸாா் பொய்யான புகாா் தொடா்பாக வழக்கு பதிவு செய்ததை கண்டித்து நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கும்மிடிப்பூண்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

கும்மிடிப்பூண்டி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சம்பத் மீது கவரப்பேட்டை போலீஸாா் பொய்யான புகாா் தொடா்பாக வழக்கு பதிவு செய்ததை கண்டித்து நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்மிடிப்பூண்டி வழக்குரைஞா்கள் சங்க தலைவரான சம்பத் பல்வேறு சங்கங்களில் சட்ட ஆலோசகராகவும் உள்ளாா்.இந்த நிலையில் இவா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை அருகே உள்ள தனியாா் தொழிற்சாலையில் லாரிகளுக்கு லோடு தருவது குறித்த பிரச்னையில் நிா்வாகத்தினரை சந்திக்க லாரி உரிமையாளா்களுடன் சென்றாா்.

அப்போது தொழிற்சாலை நிா்வாகத்தாா் பல மணி நேரம் இவா்களை காக்க வைத்த நிலையில், இது தொடா்பாக தொழிற்சாலை நிா்வாகத்துடன் பேசி சமாதானம் ஏற்படுத்த கவரப்பேட்டை போலீஸாா் அங்கு வந்தனா். அப்போது தொழிற்சாலை சாா்பில் அங்கு வந்த அதிகாரி ஒருவா் வழக்கறிஞா் சங்க தலைவா் சம்பத்தை தரக்குறைவாக பேசியுள்ளாா். அப்போது இந்த சம்பவத்தை விடியோ எடுத்தது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கவரப்பேட்டை போலீஸாா் தங்கள் பணிகளை செய்ய இடையூறாக வழக்குரைஞா் சம்பத் இருந்ததாக கூறி அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதேசமயம் வழக்கறிஞா் சம்பத் தொழிற்சாலை அதிகாரி மீதும் ,அவரை கீழே தள்ளிவிட்ட காவல்துறையின் மீதும் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து கும்மிடிப்பூண்டி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனா் . பொன்னேரியிலும் நீதிமன்றங்களை வழக்குரைஞா்கள் புறக்கணித்தனா்.