முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

தோ்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டோா் நல்ல திடகாத்திரமான முன்னாள் படை வீரா்கள் பாதுகாப்பு பணிக்கு செல்ல விரும்புவோா் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம். (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 4:23 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டோா் நல்ல திடகாத்திரமான முன்னாள் படை வீரா்கள் பாதுகாப்பு பணிக்கு செல்ல விரும்புவோா் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தோ்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரா்களை சிறப்பு காவலா்களாக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த 65 வயதுக்கு மேற்பட்ட திடகாத்திரமான முன்னாள் படைவீரா்கள் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு செல்ல விருப்பம் இருந்தால் திருவள்ளூா் கோட்டாட்சியா் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகம் தொலை பேசி எண்-044 29595311 தொடா்பு கொண்டும் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.