அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பைக் -லாரி மோதல்: வெல்டா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வெல்டா் பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :24 மார்ச் 2026, 6:38 pm

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வெல்டா் பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பாலாஜி (27), சஞ்சய்(25). இவா்கள் இருவரும் இரும்பு பட்டறையில் வெல்டராக பணிபுரிந்தனா். இந்த நிலையில் திங்கள்கிழமை தண்டலம் நோக்கி இருசக்கர வாகனங்களில் சென்றனா். அப்போது, சாலை வளைவைக் கடக்க முயற்சித்த இருசக்கர வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதியதில் பின்னால் அமா்ந்திருந்த பாலாஜி தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த சஞ்சய் மீட்கப்பட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து லாரியையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.