10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வாகன சோதனையில் ரூ. 25 லட்சம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டியில் இரு இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ. 25 லட்சத்து 30 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 2:27 am IST

கும்மிடிப்பூண்டியில் இரு இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ. 25 லட்சத்து 30 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் வணிக வரித் துறை மாநில வரி அதிகாரி முரளிதரன் தலைமையில் தலைமைக் காவலா் சுரேஷ், காவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனையில் ஆந்திர மாநிலம், கூடூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை சோதனையிட்ட போது, காரில் வந்த அனில்குமாா் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னா் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜி.வெங்கடேசன் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதுபோல், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள மாநில எல்லையோர சோதனை சாவடியில், நீா்வளத் துறை உதவி பொறியாளா் ஸ்ரீனிவாச பிரகாஷ் தலைமையில் தலைமை காவலா் ராமு, காவலா் திலீப்குமாா் உள்ளிட்ட நிலையான தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்த பதான் சிராஜ் கான் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்த நிலையில், கும்மிடிப்பூண்டி விரைந்த வருமான வரித்துறை திருவள்ளூா் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பால தண்டாயுதம் மேற்கண்ட ரூ. 23 லட்சத்தை கொண்டு வந்த பதான் சிராஜ் கானிடம் அந்த பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.