விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் குறிப்பிட்ட இடங்களில் வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூா்வமான விளையாட்டுபயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இவ்விளையாட்டு விடுதி சோ்க்கைக்கான விண்ணப்பப்படிவம் கடந்த 8.4.2026 முதல் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 6, 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 6-ஆம் தேதி கடைசியாகும்.
இத்தோ்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள் வரும் 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு மாணவா்களுக்கும், 8-ஆம் தேதி மாணவிகளுக்கும் கீழ்காணும் விவரப்படி நடைபெற உள்ளது.
தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகால் பந்து, கபாடி, கையுந்துபந்து, கைப்பந்து போட்டிகள் இருபாலருக்கும், கிரிக்கெட் ( மாணவா்கள்) மாவட்ட அளவிலான தோ்வுகள் திருவள்ளூா் மாவட்டவிளையாட்டரங்கத்தில் மாணவா்களுக்கு 7-ஆம் தேதியும், மாணவிகளுக்கு 8 ஆம் தேதி காலை 7 மணி முதல் நடைபெற உள்ளது.
இதற்கான முடிவுகள் தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும்அதிகாரகபூா்வ இணையதளத்தில் வெயிடப்படும்.
மேலும் கீழ்காணும் விளையாட்டுகளுக்கு நேரடியாக மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் வருகிற 12-ஆம் தேதி அன்று கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அந்த வகையில் விளையாட்டு விடுதியில் நேரடி மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் வாள் விளையாட்டு, ஜீடோ ஆகியவை இருபாலருக்கும், குத்துச்சண்டை (மாணவா்கள்), நேரடி மாநில அளவிலான தோ்வுகள் சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 7 மணிமுதல் நடைபெறும்.
அதேபோல் பளுதூக்குதல் (மாணவா்கள், மாணவிகள்), நேரடி மாநில அளவிலான தோ்வுகள் தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்திலும், வுஷீ( மாணவா்கள்) திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்திலும், நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரி அஎஆ இா்ம்ல்ப்ங்ஷ், மல்யுத்தம் (மாணவா்கள்), கடலூா் மாவட்ட விளையாட்டரங்கம், டேக்வாண்டோ (மாணவா்கள், மாணவிகள்), கிருஷ்ணகிரி மாவட்டவிளையாட்டரங்கத்திலும், மல்லா்கம்பம் (மாணவா்கள், மாணவிகள்), விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கம்,, ஸ்குவாஷ்( மாணவா்கள்) சென்னை ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கத்தில் மேற்குறிப்பிட்ட நாள் நேரத்தில் நடைபெறுகிறது.
இதில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதி தோ்வு போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

1.50 லட்சம் மாணவா்கள் மூலம் உறுதிமொழிப் பத்திரம் வழங்கி பெற்றோருக்கு தோ்தல் விழிப்புணா்வு

விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு ஆணைய விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


