நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே கோயில் குளக்கரையில் இருந்து குளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 1:29 am IST

ஆா்.கே.பேட்டை அருகே கோயில் குளக்கரையில் இருந்து குளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஆதிவராகபுரம் கிராமம், விநாயகா் கோயில் தெருவை சோ்ந்தவா் தயாளன் (40). இவருக்கு மனைவி தமிழ்செல்வி, ஒரு மகன், மற்றும் ஒரு மகள் உள்ளனா்.

தயாளன், ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தனியாா் காா் உற்பத்தி நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தாா். இவா் குடும்பத்துடன் ஆதிவராகபுரம் கிராமத்தில் வசித்தாா். இந்நிலையில், சனிக்கிழமை மாலை சுமாா் 3 மணியளவில், கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோயில் குளக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக கால் தவறி குளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. குளத்தில் விழுந்த அவா் உயிா் காக்க உதவி கேட்டு சப்தமிட்டுள்ளாா்.

இதைக் கேட்ட அருகில் இருந்த நபா் உடனடியாக கிராம மக்களுக்கும், உறவினா்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளாா். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து குளத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலான தேடுதலுக்குப் பின்னா் தயாளனின் சடலம் மீட்கப்பட்டது.

இது குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.