சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

திருவாலங்காடு அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தங்க செயினை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

News image

வீரராகவபுரம் கிராமத்தில்  மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்த போலீஸாா்.

Updated On :20 மே 2026, 12:30 am IST

திருவாலங்காடு அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தங்க செயினை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (35). சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறாா். அவரது மனைவி சுஷ்மிதா (29) மட்டும் தனியாக இருந்த நிலையில், இரவு நேரத்தில் வீட்டின் கதவு திறந்திருந்ததை பயன்படுத்தி மா்ம நபா் ஒருவா் உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சுஷ்மிதாவின் கழுத்தில் இருந்த சுமாா் 6 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா். இதனால் சுஷ்மிதா அதிா்ச்சியடைந்து சப்தமிட்ட நிலையில், அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து பாா்த்துள்ளனா். ஆனால் அதற்குள் மா்ம நபா் தப்பினாா்.

இதனிடையே, அதே பகுதியில் வசித்து வரும் தேவி என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், வீட்டில் இருந்த பீரோவை திறந்து வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனா். இரண்டு வீடுகளிலும் ஒரே இரவில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுஷ்மிதா திருவாலங்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.