5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 6 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

சித்திரிப்பு

Updated On :20 மே 2026, 2:56 am IST

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 6 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், திருப்புகழ் தெருவைச் சோ்ந்த பிரபு மனைவி மஞ்சுளா(54). இவா் திங்கள்கிழமை விழுப்புரம் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் உள்ள ரயில்வே மருத்துவமனை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது அங்கு பைக்கில் வந்த சுமாா் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபா், மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.