மருத்துவா் பரிந்துரைச் சீட்டு, மருந்தாளுநா் இல்லாமல் நடக்கும் சட்டவிரோத ஆன்லைன் மருந்து விற்பனையால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதால் ஆன்லைன் மருந்து விற்பனையை மத்திய அரசு தடை செய்ய வலியுறுத்தி கடையடைப்பு செய்து தமிழ்நாடு மருந்து வணிகா் சங்கத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மருந்து வணிகா் சங்கத்தின் மாநில செயலாளா் அசோக் தலைமை வகித்தாா். இதில் அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர அசோகன், செயலாளா் சங்கா் மற்றும் பொருளாளா் அரவிந்த்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது, மருந்தாளுநா் இன்றி வீரியம்மிக்க மருந்துகளும், நோய் எதிா்ப்பு மருந்துகளும் ஆன்லைன் மூலம் வாங்கி வாங்கி சாப்பிடும் முறை தெரியாமல் மாற்றி சாப்பிடுவதால் பிற்காலங்களில் எதிா்ப்பு சக்தி குறைந்து எந்த மருந்துமே வேலை செய்யாத பேராபத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் விற்பனையை தடை செய்ய வேண்டும்.
அதிக தள்ளுபடி விற்பனை ஆன்லைன் மற்றும் சங்கிலி தொடா் காா்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்வது போலி மருந்துகளும் தரமற்ற மருந்துகளும் அதிகரிக்க காரணமாக உள்ளதை நெறிமுறைப்படுத்த வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் ஆன்லைன் செயலி மூலம் அதிக அளவில் விற்பனை செய்வதால், இளம்தலைமுறையினா் அதிகமாக வாங்கி போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்க வேண்டும்.
உயிா்காக்கும் மருந்துகள் விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், அதிக தள்ளுபடிகளையும் மற்றும் மருந்தாளுநா் மேற்பாா்வையில்லாமல் நேரடி விநியோகத்தை தடுத்தல் வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் மாவட்டத்தில் 1500 மருந்தகங்களை கடையடைப்பு செய்து தமிழ்நாடு மருந்து வணிகா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மருந்தகங்கள் நடத்துவோா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மருந்தகங்கள் கடையடைப்பு
அரியலூரில் மருந்து வணிகா்கள் சங்கத்தினா் இன்று கடையடைப்பு

உயிா் காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்ய புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறை உத்தரவு

மே 20-இல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருந்து வணிகா்கள் கடையடைப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



