கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

மே 20-இல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருந்து வணிகா்கள் கடையடைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி மே-20ஆம் தேதி மருந்துக் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தவுள்ளதாக புதுக்கோட்டை மருந்து வணிகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி மே-20ஆம் தேதி மருந்துக் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தவுள்ளதாக புதுக்கோட்டை மருந்து வணிகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மருந்து வணிகா் சங்க நிா்வாகிகள் கூட்டம் வா்த்தகா் சங்கக் கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட மருந்து வணிகா் சங்கத் தலைவா் கருப்பையா தலைமை வகித்தாா். செயலா் ராமநாதன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையை காக்க வேண்டும். உயிா் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும் அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். போலி மருந்துகளின் விற்பனையை தடுக்க வலியுறுத்தி மே- 20ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் புரவலா் வீனஸ் ராஜேந்திரன், பொருளாளா் ரமேஷ் உள்ளிட்ட மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.