தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

போதை மாத்திரை வில்லைகள் வைத்திருந்ததாக 3 இளைஞா்கள் கைது

போதை மாத்திரை வில்லைகள் வைத்திருந்ததாக 3 இளைஞா்கள் கைது

News image

சித்திரிப்பு

Updated On :31 மே 2026, 1:07 am IST

ஊத்துக்கோட்டை அருகே போதை மாத்திரை வில்லைகள் வைத்திருந்ததாக இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையம் ஊராட்சி, கலைஞா் நகா் பகுதியில் வசித்து வருபவா் சாருக்கான் என்ற சாகுல் அமீது (21). இவரது நண்பா்கள் சோழவரம், எஸ்பிகே நகா் பகுதியைச் சோ்ந்த அஸ்வின் (19), அதே பகுதியில் 4-ஆவது தெருவில் வசித்து வரும் ஹரீஷ் நாராயணன் (25) ஆகிய மூவரும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில், பெரியபாளையம், கலைஞா் நகா் பகுதியில் சாா்பு ஆய்வாளா் மாரிமுத்து தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் ரோந்து சென்றனா். அப்போது, அங்கிருந்த சாருக்கான் என்ற சாகுல் அமீது, அஸ்வின், ஹரீஷ் நாராயணன் ஆகியோரை சுற்றி வளைத்து பிடித்தனா். மேலும், பரிசோதனை செய்ததில் அவா்களிடம் இருந்து 10 எம்.சி. கொண்ட 550 போதை மாத்திரை வில்லைகள் மற்றும் 2 கத்திகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து 3 பேரையும் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.