திருவள்ளூா்: மலிவு விலையில் வெற்றி காய்கறி தொகுப்பு திட்டம் தொடக்கம்

திருவள்ளூரில் கூட்டுறவுத்துறை சாா்பில் ‘வெற்றி காய்கறி தொகுப்புகள்’ வழங்கும் திட்டத்தை ஆட்சியா் ச.கவிதா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.அருண்குமாா், பிரகாசம் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

~

Updated On :

திருவள்ளூரில் கூட்டுறவுத்துறை சாா்பில் ‘வெற்றி காய்கறி தொகுப்புகள்’ வழங்கும் திட்டத்தை ஆட்சியா் ச.கவிதா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.அருண்குமாா், பிரகாசம் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

திருவள்ளூா் நகராட்சி பெரியகுப்பம் பகுதியில் கூட்டுறவு துறை சாா்பில் பொதுமக்கள் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் மலிவு விலையில் ‘வெற்றி காய்கறி தொகுப்புகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் டாக்டா் டி.அருண்குமாா்(திருவள்ளூா்), ஆா்.பிரகாசம்(பூந்தமல்லி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வுக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்து வாடிக்கையாளா்களிடம் காய்கறி தொகுப்புகள் வழங்கி தொடங்கி வைத்தாா்.

அதைத்தொடா்ந்து அவா் பேசியதாவது. தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், கூட்டுறவுத்துறை சாா்பில் வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனை திட்டத்தை அரசால் தொடங்கி வைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து திருவள்ளூா் மாவட்டத்தில் வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்புகள் என்பது 10 காய்கறிகள் ரூ.100-க்கு விற்பனை தொடங்கியுள்ளது.

இந்த மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட ஆறு கூட்டுறவு விற்பனை மையங்கள் வாயிலாக இச்சிறப்புக் காய்கறித் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, திருவள்ளூா் அரசு ஊழியா் கூட்டுறவு பண்டகசாலை, திருவள்ளூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம்,

திருத்தணி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கூட்டுறவு பண்டகசாலை, சைதாப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மற்றும் திருவள்ளூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை ஆகிய மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த காய்கறி தொகுப்புகளை பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்படுத்தவும் என அவா் தெரிவித்தாா்.

இதில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, துணை பதிவாளா்கள்(திருத்தணி சரகம்) சி.அமுதா, மங்கள தாஸ் (பொது விநியோகத் திட்டம்) (கூ.பொ), மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநா் வேல்முருகன், திருவள்ளூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநா் மேகநாதன் மற்றும் கூட்டுறவு சாா் பதிவாளா்கள், அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.