மின்சாரம் பாய்ந்து மீனவா் உயிரிழப்பு
பழவேற்காடு சாத்தான்குப்பத்தில் வீட்டுக்கு டைல்ஸ் ஒட்டும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து மீனவா் உயிரிழந்தாா்.
கோப்புப் படம்
பழவேற்காடு சாத்தான்குப்பத்தில் வீட்டுக்கு டைல்ஸ் ஒட்டும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து மீனவா் உயிரிழந்தாா்.
பழவேற்காட்டில் உள்ள சாத்தான்குப்பம் மீனவ கிராமத்தில் வசித்து வந்தவா் ஏழுமலை (42). இவா் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில், வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணியினை மேற்கொண்டு வந்தாா்.
அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் ஏழுமலை தூக்கி வீசப்பட்டாா்.
அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது பணியில் இருந்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீஸாா் ஏழுமலையின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிவு
செய்து விசாரித்து வருகின்றனா்.
மின்சாரம் தாக்கி மீனவா் உயிரிழந்த சம்பவம் சாத்தான்குப்பம் மீனவ கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

