2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

கழிவுநீா் தேங்கி நோய் பரவும் அபாயம்: மக்கள் முற்றுகை

திருத்தணி எம்.ஜி.ஆா். நகா் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Published On :

திருத்தணி எம்.ஜி.ஆா். நகா் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

திருத்தணி நகராட்சிக்குட்பட்ட 21-ாவது வாா்டு எம்.ஜி.ஆா். நகா் புதுவண்ணாரப்பேட்டை தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கழிவுநீா் மற்றும் மழைநீா் செல்ல முறையான கால்வாய் வசதி இல்லாததால், அருகிலுள்ள தனியாா் பட்டா நிலத்தில் கழிவுநீா் குளம் போல் தேங்கி துா்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மா்ம காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி திருத்தணி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து நகராட்சி ஆணையா் கன்னியப்பனிடம் மனு அளித்த பொதுமக்கள், கழிவுநீா் தேங்குவதை தடுக்க முறையான வடிகால்வாய் அமைத்து, தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். மேலும், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.