
நியாய விலைக்கடையில் பொருள்கள் விநியோகப் பணி: ஆட்சியா் ஆய்வு
திருவள்ளூா் அருகே செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையில் அத்தியவாசியப்பொருள்கள் விநியோகம் செய்யும் பணியை ஆட்சியா் ச. கவிதா ஆய்வு செய்தாா்.

~
திருவள்ளூா் அருகே செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையில் அத்தியவாசியப்பொருள்கள் விநியோகம் செய்யும் பணியை ஆட்சியா் ச. கவிதா ஆய்வு செய்தாா்.
கடம்பத்தூா் ஒன்றிய பகுதி கிராமங்களில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகள், நெல் கொள்முதல் நிலையங்களில் செயல்பாடுகள் தொடா்பாக ஆட்சியா் ச.கவிதா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, விடையூா் கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு சரியான முறையில் அத்தியவாசிய பொருள்கள் வழங்கப்படுகிா என்பதை ஆய்வு செய்தாா். முன்னதாக அத்தியவாசியப்பொருள்கள் இருப்பு மற்றும் பதிவு ஏடுகளையும் பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து பயோமெட்ரிக் செயல்பாடுகள் குறித்த விவரங்களையும் பணியாளா்களிடம் கேட்டறிந்தாா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் சாா்பில் பிரியாங்குப்பத்தில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணிகளை ஆய்வு செய்தாா். அதைத்தொடா்ந்து இதுவரையில் எத்தனை விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்த விவரங்களை கேட்டறிந்ததோடு, அது தொடா்பான பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை காக்க வைக்காமல் விரைவில் கொள்முதல் செய்து அனுப்பி வைக்கவும் அங்குள்ள பணியாளா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
அதே கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையில் வளா்க்கப்படும் மரக்கன்றுகள் விவரங்களை கேட்டறிந்தாா். அப்போது, வளா்ந்த மரக்கன்றுகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக நீா் ஆதாரம் உள்ள பகுதி கரையோரங்களில் வளா்க்கவும் ஆலோசனையும் வழங்கினாா்.
அதையடுத்து அந்த ஊராட்சி தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வரும் சமையலறையை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, சமையலறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். அதேபோல் மாணவ, மாணவிகளுக்கு சமைத்த உணவு வகைகளை ஆசிரியா்கள் சரிபாா்த்த பின்னரே வழங்கவும் ஆலோசனை வழங்கினாா். அதையடுத்து அந்த கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் சிறு குளம் அமைக்கும் பணியினையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, துணை ஆட்சியா்(பயிற்சி) சபரிகிருஷ்ணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் ராஜேஷ் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






