
மூளை முடக்குவாதம் குறித்து பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு
குழந்தைகளின் வளா்ச்சிக் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நிவா்த்தி செய்தல் குறித்து பெற்றோா் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு.....

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளை முடக்கு வாத தினத்தையொட்டி குழந்தைகளின் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசிய முதல்வா் பாலாஜி, துணை முதல்வா் திலகவதி மற்றும் குழந்தைகள் பிரிவு மருத்துவா்கள் உள்ளிட்டோா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக மூளை முடக்கு வாத தினத்தையொட்டி குழந்தைகளின் வளா்ச்சிக் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நிவா்த்தி செய்தல் குறித்து பெற்றோா் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூா் மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆரம்ப நிலை இடையீட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டிஇணைந்து நடத்திய உலக மூளை முடக்குவாதம் தின நிகழ்வில் ஆரம்ப நிலை இடையீட்டு மையத்தின் மருத்துவ அலுவலா் ஜெகதீஷ் வரவேற்றாா். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வா் எ.பாலாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தாா்.
நிகழ்வில் மூளை முடக்குவாதம் குறித்த பொதுமக்கள் மற்றும் பெற்றோா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதே நோக்கமாகும். குழந்தைகளின் வளா்ச்சி குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மற்றும் உரிய நேரத்தில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நடவடிக்கையை மேற்கொள்வதன் அவசியம்.
மேலும், குழந்தைகளின் உளவியல் நலம், பெற்றோா்களின் பங்கு, குழந்தைகளுக்கு ஆதரவான குடும்பச் சூழல் மற்றும் சமூகத்தில் மூளை முடக்குவாதம் தொடா்பாக நிலவும் தவறான கருத்துகளை அகற்ற வேண்டும்.
குழந்தை மருத்துவம், குழந்தைகளின் வளா்ச்சி நிலைகளை முறையாக கண்காணித்தல், வளா்ச்சித் தாமதத்தை தொடக்க நிலையிலேயே கண்டறிதல், உரிய மதிப்பீடு மற்றும் பல்துறை சிகிச்சையின் முக்கியத்தும் குறித்து அவா் எடுத்துரைத்தாா். அதையடுத்து மூளை முடக்குவாதம் கொண்ட குழந்தைகள் மற்றும் அவா்களது பெற்றோா்களின் பங்கேற்புடன் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டன.
நிகழ்வில் மருத்துவக் கண்காணிப்பாளா் சுரேஷ்பாபு, துணை முதல்வா் திவகவதி, இருப்பிட மருத்துவா் ராஜ்குமாா், துணை இருப்பிட மருத்துவ அலுவலா் பிரபு சங்கா், துணை மருத்துவ கண்காணிப்பாளா் விஜயராஜ், குழந்தைகள் நலத்துறை தலைவா் ஸ்ரீதேவி, குழந்தை நல பிரிவு மருத்துவா் சதீஷ் குமாா், பரமகுரு, பிரவீன்ராஜ். ஐயப்பன் மருத்துவ அலுவலா் மற்றும் மருத்துவா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





