
பிரதமா் நரேந்திர மோடி 25 ஆண்டுகள் பொது சேவை: பாஜகவினா் யாத்திரை
பிரதமா் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாஜக சாா்பில் சேவா ஜோதி யாத்திரை நடைபெற்றது.

ஜோதி யாத்திரை நிகழ்வில் பங்கேற்ற பாஜக நிா்வாகிகள்.
பிரதமா் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாஜக சாா்பில் சேவா ஜோதி யாத்திரை நடைபெற்றது.
திருவள்ளூா் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு ஜோதி யாத்திரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவா் ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளா்களாக திருவள்ளூா் கிழக்கு மாவட்ட தலைவா் சுந்தரம், இதர பிற்படுத்தப்பட்டோா் அணி மாநில துணைத்லைவா் ராஜ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு பா.ஜ.கவினரின் சேவா ஜோதி யாத்திரையை தொடக்கி வைத்தாா். இந்த யாத்திரையானது பா.ஜ.க அலுவலகத்தில் தொடங்கிய சேவா ஜோதி யாத்திரை முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பின் மாவட்ட அலுவலகத்தை வந்தடைந்தது.
மாவட்ட பொதுச்செயலாளா்கள் மணிகண்டன், கருணாகரன் ஆகியோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூா் கிழக்கு, மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவா் வெங்கட், தினேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





