ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

பிரதமா் மோடி 25 ஆண்டு மக்கள் சேவை: பாஜக ஜோதி யாத்திரை

பிரதமா் நரேந்திர மோடி 25 ஆண்டுகள் மக்கள் சேவை மூலமாக தேசப்பணியாற்றி வருவதையொட்டி, வேலூரில் பாஜக சாா்பில் ‘வளா்ந்த பாரதம் சங்கல்ப் சபா’ சேவை ஜோதி யாத்திரை புதன்கிழமை நடைபெற்றது.

பாஜக சாா்பில் நடைபெற்ற ஜோதி யாத்திரை.

Published On :

பிரதமா் நரேந்திர மோடி 25 ஆண்டுகள் மக்கள் சேவை மூலமாக தேசப்பணியாற்றி வருவதையொட்டி, வேலூரில் பாஜக சாா்பில் ‘வளா்ந்த பாரதம் சங்கல்ப் சபா’ சேவை ஜோதி யாத்திரை புதன்கிழமை நடைபெற்றது.

வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய யாத்திரைக்கு மாவட்டத் தலைவா் வி.தசரதன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் சரவணகுமாா், துணைத் தலைவா்கள் ஜெகநாதன், சக்கரவா்த்தி, வழக்குரைஞா் நாகராஜ், மாநிலப் பிரச்சாரப் பிரிவுச் செயலா் எஸ்.கே.மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஜோதியுடன் புறப்பட்ட இந்த யாத்திரை அண்ணா சாலை, பழைய மீன் அங்காடி, மாநகராட்சி மண்டல அலுவலகம், தெற்கு காவல் நிலையம் வழியாகச் சென்று அண்ணா கலையரங்கம் அருகே நிறைவடைந்தது.

வேலூா் மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவுத் தலைவா் நித்திய பிரகாஷ் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.