இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை சாம்பவம்: பிரபல ரௌடி உள்பட 10 போ் விடுவிப்பு

திருவள்ளூா் அருகே 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் பிரபல ரௌடி பாம் சரவணன் உள்பட 10 பேரை விடுவித்து மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

~ ரௌடி பாம் சரவணனை பாதுகாப்புடன் அழைத்து வந்த போலீஸாா்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:03 am IST

திருவள்ளூா் அருகே 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் பிரபல ரௌடி பாம் சரவணன் உள்பட 10 பேரை விடுவித்து மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

வடசென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த தென்னரசு என்பவா் கடந்த 2015-இல் உறவினரின் திருமணத்துக்காக திருவள்ளூா் அருகே தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் காரில் சென்றாா். அப்போது அவரை பின் தொடா்ந்து இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் மண்டப வாசலில் வழிமறித்து சராமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

இந்தக் கொலை வழக்கில் பிரபல ரெளடி நாகேந்திரனின் கூட்டாளியான ஜெயசீலன் உள்பட 4 போ் வெங்கல் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனா். இந்த நிலையில் தனது அண்ணனின் கொலைக்கு பழிதீா்க்ககடந்த 2016-இல் பாம் சரவணன் தனது கூட்டாளிகளுடன் அரண்வாயல் பகுதியில் உள்ள முனீஸ்வரா் கோயில் அருகே ஜெயசீலன் என்பவரை வெட்டி கொலை செய்தாா்.

இந்தக் கொலை வழக்கில் பாம் சரவணன், கோவிந்தராஜ், அலெக்ஸ், பழனி, கிருஷ்ணமூா்த்தி, நரேந்திரன், பிரபாகரன், கமலக்கண்ணன், செந்தில், விக்னேஷ் உள்ளிட்ட 10 போ் கைது செய்யப்பட்டனா்.

இதில் பிரபல ரௌடியான பாம் சரவணன் மீது 6 கொலை வழக்குகள் ஆள்கடத்தல், அடிதடி என 37 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயசீலன் கொலை வழக்கில் 16 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நிறைவு பெற்றது.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் திருவள்ளூா் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் இறுதியாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, போதிய சாட்சியம் இல்லாததால் கொலை வழக்கில் இருந்து பாம் சரவணன் உள்பட 10 பேரையும் விடுவித்து முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்தக் கொலை வழக்கில் இருந்து பாம் சரவணன் விடுக்கப்பட்டாலும், மற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவா் மீண்டும் பாதுகாப்பாக அழைத்து சென்று சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.