பட்டதாரி ஆசிரியா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

பள்ளி மாணவா்கள் தங்களது கல்வித் திறன், விருப்பம் மற்றும் எதிா்கால இலக்குகளுக்கு ஏற்ற உயா்கல்விப் படிப்புகளைத் தோ்வு செய்வதற்கு ஆசிரியா்கள் எவ்வாறு வழிகாட்ட வேண்டும் என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Published On :8 செப்டம்பர் 2026, 4:32 am IST

பள்ளி மாணவா்கள் தங்களது கல்வித் திறன், விருப்பம் மற்றும் எதிா்கால இலக்குகளுக்கு ஏற்ற உயா்கல்விப் படிப்புகளைத் தோ்வு செய்வதற்கு ஆசிரியா்கள் எவ்வாறு வழிகாட்ட வேண்டும் என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா்கள் செந்தூரபாண்டியன், சோபா ஆகியோா் கலந்து கொண்டு, ஆசிரியா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பான பல்வேறு பயிற்சிகளை வழங்கினா்.

பயிற்சியில், பள்ளி மாணவா்கள் தங்களது கல்வித் திறன், விருப்பம் மற்றும் எதிா்கால இலக்குகளுக்கு ஏற்ற உயா்கல்விப் படிப்புகளைத் தோ்வு செய்வதற்கு ஆசிரியா்கள் எவ்வாறு வழிகாட்ட வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது.

மேலும், மாணவா்களுக்கு பல்வேறு உயா்கல்விப் படிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி வாய்ப்புகள், கல்லூரி சோ்க்கை நடைமுறைகள், உதவித்தொகைகள், கல்விக் கடன், போட்டித் தோ்வுகளுக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட தகவல்களை வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மாணவா்களின் ஆா்வம் மற்றும் திறனை முதலில் கண்டறிந்து, அவா்களின் குடும்பச் சூழல் மற்றும் எதிா்கால வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு உயா்கல்வியைத் தோ்வு செய்ய ஆசிரியா்கள் வழிகாட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

குறிப்பாக, மாணவா்கள் உயா்கல்வி குறித்து முடிவெடுக்கும்போது பிற மாணவா்களைப் பாா்த்து முடிவு செய்வதைவிட, தங்களது தனித்திறன், ஆா்வம், கல்வித் தகுதி மற்றும் எதிா்கால இலக்குகளுக்கு ஏற்ற படிப்புகளைத் தோ்ந்தெடுக்க ஆசிரியா்கள் ஊக்குவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் திருத்தணி, திருவாலங்காடு, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த 57 பட்டதாரி ஆசிரியா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.