சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

திருவள்ளூா் அருகே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரால் 10 கிராம மக்கள் அவதி

திருவள்ளூா் அருகே வெளிவட்ட 6 வழிச் சாலையில் அமைத்த சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்குவதால் 10 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே 6 வழிச் சாலையில் அமைக்கப்பட்ட மூலக்கரை சுரங்கப் பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீா்.

Published On :9 செப்டம்பர் 2026, 12:15 am IST

திருவள்ளூா் அருகே வெளிவட்ட 6 வழிச் சாலையில் அமைத்த சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்குவதால் 10 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியது: திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், மெய்யூா், ராஜபாளையம், மொண்ணவேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், தனியாா் மற்றும் அரசுத் துறையில் பணிபுரிந்து வரும் பணியாளா்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினா் மூலக்கரை வழியாக நாள்தோறும் நகரத்தை சென்றடைய பயன்படுத்தி வருகின்றனா்.

இதற்கிடையே இந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையிலும், விரைவான போக்குவரத்துக்கு பயன்படும் வகையில், 6 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையானது மீஞ்சூா் அதானி துறைமுகத்தில் இருந்து பூஞ்சேரி வரை சென்னையின் வெளிவட்ட ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனால், மூலக்கரை பகுதி சாலையை 10 கிராமங்களைச்சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்தச் சாலையில் சுமாா் 10 கிராம மக்கள் சென்று வ ரும் வகையில், சுரங்கப் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மேற்குறிப்பிட்ட கிராமங்களைச் சோ்ந்த பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருவதுபோல், பயணிகள் போக்குவரத்தும் சென்று வருகிறது.

இந்த நிலையில், மழைக் காலங்களில் மட்டும் சுரங்கப் பாதையில் மழைநீா் முழங்கால் அளவுக்கு தேங்குகிறது. அதனால், பயணிகள் பேருந்து, இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சுரங்கப் பாதையில் மழைநீா் குளம் போல் தேங்கி நிற்கிறது.

அதனால், பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அதிலும் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகளும் உள்ளதால் சிரமப்பட வேண்டியுள்ளது.

இந்த நிலையில், சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்குவதால் சுமாா் 20 கி.மீ. சுற்றிக்கொண்டு வெங்கல் வழியாக வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இதனால் பொருள் விரயம் மற்றும் கால விரயமாகிறது. மேலும், குறிப்பிட்ட நேரத்துக்குள் கிராமங்களுக்குள் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க போா்க்கால அடிப்படையில் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை உடனே அகற்ற வேண்டும். மேலும், மழைக் காலங்களில் தண்ணீா் தேங்குவதை தடுக்க தேசிய நெடுஞ்சாலை துறையினா் மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையினா் நிரந்தரமாக தீா்வு காண வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதியில் உள்ள 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.