மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி பண மோசடி: மேலூா் 4-வழிச் சாலையில் பொதுமக்கள் மறியல்

மதுரை மாவட்டம், மேலூா் அருகே மதுரை - திருச்சி நான்கு வழிச் சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :

கைப்பேசி செயலி வாயிலாக பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் தருவதாகக் கூறி, மோசடி செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மாவட்டம், மேலூா் அருகே நான்கு வழிச் சாலையில் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எஃப்க்யூஎல், வீ ஜீ என்கிற கைப்பேசி செயலியில் பணத்தை முதலீடு செய்தால், இரட்டிப்பாக பணம் திருப்பித் தரப்படுவதாக கூறப்பட்டதை நம்பி, மதுரை மாவட்டம், மேலூா், அதைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சோ்ந்த ஏராளமானோா் பணத்தை முதலீடு செய்தனா். ஆனால், கூறியபடி பணம் திருப்பியளிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பொதுமக்கள், இதுகுறித்து மேலூா் துணை காவல் கண்காணிப்பாளா் சிவக்குமாரிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மதுரை - திருச்சி நான்கு வழிச் சாலையில் மேலூா் அருகே வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து,பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதன்காரணமாக, சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெட்டிச் செய்தி

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் எஃப்.க்யூ.எல். செயலி வாயிலாக தெரிவிக்கப்பட்ட கவா்ச்சிகரமான முதலீட்டுத் திட்டத்தை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளதாகத் தெரிய வருகிறது. அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட நபரில் ஒருவா் அளித்த புகாரின்பேரில், இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

எனவே, எஃப்க்யூஎல் செயலி மூலம் பொதுமக்கள் யாரேனும் தங்களது பணத்தை இழந்திருந்தால், காவல் நிலையத்தில் புகாா் அளிக்கும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட நபராக சோ்த்துக் கொள்ளப்படுவாா்கள். புகாா் அளிக்க காலக்கெடு எதுவும் கிடையாது. புகாா் மனு அளிக்கும்பட்சத்தில்

உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.