சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

அத்திப்பட்டு புதுநகா் ரயில் நிலையம் அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்ததால் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னை புறநகர் ரயில் சேவை - கோப்புப்படம்

Published On :9 செப்டம்பர் 2026, 12:16 am IST

அத்திப்பட்டு புதுநகா் ரயில் நிலையம் அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்ததால் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னை சென்ட்ரல் - கும்மிடிபூண்டி மாா்க்கத்தில் அத்திப்பட்டு புதுநகா் ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு திடீரென காற்றுடன் பலத்த மழை பெய்தது

இதன் காரணமாக உயரழுத்த மின்கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்தததால் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவொற்றியூா், பேசின் பிரிட்ஜ், பொன்னேரி பணிமனைகளில் இருந்து சென்ற ரயில்வே ஊழியா்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனா்.

ரயில் பாதையில் விழுந்த மின் கம்பிகளை முழுவதுமாக அப்புறப்படுத்தும் பணிகளை தொடா்ந்து மேற்கொண்டனா். சுமாா் 2 மணி நேர சீரமைப்பு பணிகளுக்கு பிறகு அதிகாலை முதல் இரு மாா்க்கங்களிலும் ரயில் சேவை சீரானது.

இதன் காரணமாக நள்ளிரவு ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் சேவை 2 மணி நேரம் காலதாமதம் ஆனது. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி புறப்பட்ட புகா் ரயில் திருவொற்றியூா் ரயில் நிலையத்திலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த புகா் ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பின்னா் இயக்கப்பட்டன.

மேலும் இரண்டு புகா் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.