உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

தேசிய அளவில் ரயில் நிலையங்களின் வருமானப் பட்டியலில் சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு 3-ஆவது இடம் கிடைத்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - கோப்புப் படம்

Published On :5 செப்டம்பர் 2026, 12:51 am IST

தேசிய அளவில் ரயில் நிலையங்களின் வருமானப் பட்டியலில் சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு 3-ஆவது இடம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நாட்டில் ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நகரப் பகுதிகளில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 9 சதவீதம் வரையில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த நிதியாண்டில் தேசிய அளவில் பயணியா் வருகைப் பிரிவில் அதிகமாக வருவாய் ஈட்டும் நிலையங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன்படி, புது தில்லி ரயில் நிலையம் ஆண்டுக்கு ரூ.3,337 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் வகிக்கிறது. மேற்கு வங்க மாநிலம் ஹௌரா நிலையம் ரூ.1,692 கோடி வருவாய் ஈட்டி 2-ஆம் இடம் பிடித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ரூ. 1,299 கோடி வருவாய் ஈட்டி 3-ஆம் இடம் பிடித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு அடுத்தபடியாக தெலங்கானாவில் உள்ள செகந்திராபாத் நிலையம் ரூ.1,276 கோடி, புது தில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையம் ரூ.1,227 கோடி என அதற்கடுத்து இடங்களை மும்பை, அகமதாபாத், புணே ஆகிய நிலையங்கள் இடம்பிடித்துள்ளன என்று தெரிவித்தனா்.

இந்நிலையில், அதிக வருவாய் ஈட்டிய சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரயில் பாதைகள் நான்கு வழிப்பாதைகளாக மாற்ற ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வரும் 2030-ஆம் ஆண்டில் அந்தப் பாதைகளில் 50 சதவீதம் கூடுதலாக ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக ரயில் பயணா் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஜாபா் அலி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.