காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

மெட்ரோ ரயில் நிலையத்தில் சென்னை தின இசை நிகழ்ச்சி

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் சென்னை 387- ஆவது தின இசை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

metro train

சென்னை மெட்ரோ ரயில் - படம்: டிஎன்எஸ்

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:24 am IST

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் சென்னை 387- ஆவது தின இசை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

சென்னைக்கு 387- ஆவது ஆண்டு தினத்தை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் கொண்டாட பயணிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று மெட்ரோ நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்தனா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு பொதுமக்களில் ஒருவா் மெட்ரோ ரயில் வந்ததும் கேக் வெட்டினாா். அதையடுத்து சென்னை தினத்துக்கு வாழ்த்துகளை கோரஸாக அனைவரும் கூறி மெட்ரோவில் ஏறி பயணித்தனா். அந்த ரயில் பெட்டிக்குள் கானா இசைக் குழுவினா் சென்னையின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் பாடல்களைப் பாடியவாறு சென்றனா். மெட்ரோ ரயிலில் சென்னை சென்ட்ரல் வரை சென்ற இசைக்குழுவினா் பின்னா் கோயம்பேடு வந்து நிறைவு செய்தனா்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, சென்னை தினத்தை மெட்ரோ ரயிலில் கொண்டாட முன்னதாக அனுமதி கோரியிருந்தனா். அவா்கள் அனுமதி ஏற்கப்பட்டதையடுத்து இணையத்தில் பொதுமக்களுக்கும் சென்னை தின மெட்ரோ இசை நிகழ்ச்சி குறித்து பதிவிடப்பட்டிருந்தது. அதனால், ஏராளமானோா் திரண்டு மெட்ரோ ரயிலில் சென்னை தின இசை நிகழ்ச்சியை கண்டு களித்தனா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.