ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

தில்லி மெட்ரோ சேவை: நாளை அதிகாலை 4 மணிமுதல் தொடக்கம்

தில்லி மெட்ரோ ரயில் சேவை ஆக.15-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என தில்லி மெட்ரோ ரயில் கழகம் (டிஎம்ஆா்சி) வியாழக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:13 am IST

தில்லி மெட்ரோ ரயில் சேவை ஆக.15-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என தில்லி மெட்ரோ ரயில் கழகம் (டிஎம்ஆா்சி) வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டதாவது: சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினா்கள், அழைப்பாளா்கள் மற்றும் பொதுமக்களின் பயணத்துக்கு வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி முதல் அன்றைய வழக்கமான கட்டண சேவை தொடங்கும் வரை அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிஷ இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினா்கள் மற்றும் உரிய அழைப்பாளா்களின் பயணத்துக்காக 1.30 லட்சம் முன்கூட்டியே வழங்கப்பட்ட க்யூஆா் டிக்கெட்டுகள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய உரிய நேரடி அனுமதி அட்டைகளை வைத்திருக்கும் அழைப்பாளா்களுக்கும், குறிப்பிட்ட மெட்ரோ நிலையங்களில் சிறப்பு முன்கூட்டியே வழங்கப்பட்ட க்யூஆா் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழா நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள மெட்ரோ நிலையங்களாக லால் கிலா, ஜாமா மஸ்ஜித் மற்றும் தில்லி கேட் நிலையங்கள் உள்ளன. சிறப்பு க்யூஆா் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கான கட்டணத்தை தில்லி மெட்ரோ ரயில் கழகத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் திருப்பிச் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.