FOLLOW US

ON GOOGLE DISCOVER

செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

பட்ஜெட் 2026! ஓசூர் - கர்நாடகத்தின் பொம்மசந்திரா இடையே புதிய மெட்ரோ ரயில் திட்டம்!

ஓசூர் - கர்நாடகத்தின் பொம்மசந்திரா இடையே செயல்படுத்தப்படவுள்ள புதிய மெட்ரோ ரயில் திட்டம் குறித்து...

News image

ஓசூர் - கர்நாடகத்தின் பொம்மசந்திரா இடையே புதிய மெட்ரோ ரயில் திட்டம்! - படம்: டிஎன்டிஐபிஆர்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 1:15 pm IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகிய இரண்டு அரசுகளுடனும் இணைந்து, தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருவதாக தமிழக பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் என். மரிய வில்சன் இன்று(ஆக. 5) தாக்கல் செய்து உரையாற்றினார்.

அவர் மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக பேசுகையில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 118.9 கி.மீ. நீளத்திலான மூன்று வழித்தடங்களைக் கொண்ட கட்டம்-IIன் பணிகள் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான தடத்தை, ஏற்கெனவே உள்ள வடபழனி மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்படும் வகையில் 14.64 கி.மீ. நீளத்திலான, 11 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்ட கட்டம்-II-ன் முதல் பகுதி, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் மத்திய அரசின் தீவிர பரிசீலனையின் கீழ் உள்ளன.

(i). சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை.

(ii). ஆவடி வழியாக கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை.

(iii). ஸ்ரீபெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை.

கூடுதல் மெட்ரோ ரயில் வழித்தடத் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவான ஒப்புதல் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகிய இரண்டு அரசுகளுடனும் இணைந்து தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது” என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

Summary

Regarding the new metro rail project proposed between Hosur and Bommasandra, Karnataka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.