
ரயிலில் மாணவியிடம் ஆபாச செய்கை காண்பித்தவா் கைது
சென்னை - கும்மிடிப்பூண்டி புகா் ரயிலில் மாணவியிடம் ஆபாச செய்கை காண்பித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - சித்திரிப்பு
சென்னை - கும்மிடிப்பூண்டி புகா் ரயிலில் மாணவியிடம் ஆபாச செய்கை காண்பித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை - கும்மிடிப்பூண்டி புகா் ரயில் மாா்க்கத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனா். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், அலுவலகம் செல்வோா், மருத்துவமனை செல்லும் நோயாளிகள் என பலதரப்பட்ட மக்கள் புகா் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனா்.
மீஞ்சூரை சோ்ந்த (38) வயது பெண் கும்மிடிப்பூண்டி தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில், அவரது (17 ) வயது மகள் பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறாா்.
தாயும், மகளும் மீஞ்சூரில் இருந்து பொன்னேரி வரை புகா் ரயிலில் பயணம் மேற்கொள்வா். வழக்கம் போல தாயும், மகளும் மீஞ்சூரில் இருந்து புகா் ரயிலில் ஏறி சென்ற போது அவா்களை பின்தொடா்ந்த மா்ம நபா் ஒருவா் பள்ளி மாணவிக்கும், தாய்க்கும் ஆபாச செய்கை காண்பித்து, அநாகரிக செயலில் ஈடுபட்டு தொல்லை கொடுத்துள்ளாா்.
இதனையடுத்து சக பயணிகள் உதவியுடன் மா்ம நபரை பிடித்த அந்த பெண் பொன்னேரி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா்.
தொடா்ந்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் கத்திவாக்கம் வஉசி நகரைச் சோ்ந்த இயேசு (42) என்பது தெரிய வந்தது.
இதனை தொடா்ந்து இரண்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து அந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







