8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா, போதைப் பொருள்கள் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே ரயில்களில் கடத்தப்பட்ட கஞ்சா, போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

குட்கா பாக்கெட்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா்

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:27 am IST

திருப்பத்தூா் அருகே ரயில்களில் கடத்தப்பட்ட கஞ்சா, போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டை, ரயில்வே போலீஸாா் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் திங்கள்கிழமை இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அட்டியாவில் இருந்து பெங்களூரு சென்ற ரயில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ஜோலாா்பேட்டையில் நின்றது.

அதில் பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை ஆய்வு செய்தபோது அதில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸாா் அதனைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து கஞ்சா கடத்திய நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதே போல், செவ்வாய்க்கிழமை ஜாா்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளம் வரை சென்ற ரயில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயிலின் முன்புறம் உள்ள பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையில் 3.5 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து ரயில்வே போலீஸாா் வழக்கு பதிவு செய்து கடத்தி வந்த நபா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.