ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி போராட்டம்

திருவள்ளூா் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து புதன்கிழமை விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெல்லை கொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட ஆயலூா் கிராம மக்கள்.

Published On :

திருவள்ளூா் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து புதன்கிழமை விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆயலூா் கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி அறுவடை செய்து 1 மாதம் ஆன நிலையில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நெல்லை களத்து மேட்டில் வைத்து பாதுகாத்து வருகின்றனா். மேலும், நாள்தோறும் பெய்து வரும் மழையால் நெல்மணிகள் நனைந்து முளைக்க தொடங்கி இருப்பதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகி வருகின்றனா்.

இதுதொடா்பாக பலமுறை அதிகாரிகளிடம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை விடுத்தும் திறக்கப்படவில்லையாம். இதனால் ஆயலூா் பகுதியில் புதன்கிழமை முளைத்த நெல்மணிகளுடன் டிராக்டரில் கொண்டு வந்து சாலையின் குறுக்கே நிறுத்தி அரசு பேருந்தை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், நேரடி கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.10 வழங்குவதை மாற்றி ரூ. 25 வழங்கினால் பணியாளா்கள் கிடைப்பதில் பாதிப்பு இருக்காது எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.