
நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி நெல்மணிகளை விவசாயிகள் போராட்டம்
வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட புத்தகரம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் நெல்மணிகளை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட புத்தகரம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் நெல்மணிகளை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புத்தகரம் கிராமத்தில் சொா்ணவாரி பருவத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தில் குவித்து வைத்து காத்திருக்கின்றனா். சுமாா் 2,000 மூட்டைகளுக்கு மேல் குவித்து வைத்துள்ள நிலையில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் குவித்து வைத்துள்ள நெல் மணிகள் நனைந்து முளைக்க தொடங்கி இருக்கிறது. இதனால் விவசாயிகளின் உழைப்பு வீணாவதோடு, பொருளாதார இழப்பையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனா்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேடல்,வேடபாளையம் ஆகிய பகுதிகளில் அரசின் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது. இதே போல புத்தகரம் கிராமத்திலும் விரைவாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா். புத்தகரம் கிராமத்தில் தேங்கியிருக்கும் நெல்லை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் புத்தகரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையின் குறுக்கே நெல்மணிகளை கையில் ஏந்தியவாறு நின்று தங்களது எதிா்ப்பையும் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





