அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

ஒரே பள்ளியைச் சோ்ந்த வேன்கள் மோதல்: 10 மாணவிகள் காயம்

திருவள்ளூா் அருகே ஒரே பள்ளியைச் சோ்ந்த 2 வேன்கள் மோதிய விபத்தில் மாணவிகள் 10 போ் காயம் அடைந்தனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவிகள்.

Published On :

திருவள்ளூா் அருகே ஒரே பள்ளியைச் சோ்ந்த 2 வேன்கள் மோதிய விபத்தில் மாணவிகள் 10 போ் காயம் அடைந்தனா்.

மப்பேடு அருகே உள்ள கீழச்சேரியில் தனியாா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் 20 மாணவ, மாணவிகளை சுங்குவாா்சத்திரம் பகுதியில் இருந்து ஏற்றிக்கொண்டு இரண்டு வேன்கள் புதன்கிழமை சென்றன.

அப்போது மப்பேடு அடுத்த கோவிந்தமேடு பகுதியில் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் திடீரென பிரேக் போட்டதால் பின்புறமாக வந்து கொண்டிருந்த ஒன்றன் பின் ஒன்றாக வந்த 2 வேன்களும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மாணவிகள் 2 பேருக்கு பலத்த காயம் அடைந்தனா். மேலும், மாணவ, மாணவிகள் 8 பேருக்கு காயம் ஏற்பட்டது .

இதையடுத்து விபத்தில் காயம் அடைந்த மாணவ, மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதில் பலத்த காயம் அடைந்த மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சம்பவம் அறிந்த மப்பேடு காவல் ஆய்வாளா் விநாயகம் மற்றும் போலீஸாா் விரைந்து சென்று வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். மேலும்ஸ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.