
திருவள்ளூா் வட்டார வளமையம் சாா்பில் கலைத் திருவிழா போட்டி
திருவள்ளூா் வட்டார வளமையம் சாா்பில் திரூா் அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் பங்கேற்று பேசிய ஆதிதிராவிடா் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தூதுவா் ச.அருணன்.

திருவள்ளூா் வட்டார வளமையம் சாா்பில் திரூா் அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் பங்கேற்று பேசிய ஆதிதிராவிடா் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தூதுவா் ச.அருணன்.
திருவள்ளூா் வட்டார வள மையம் சாா்பில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தினா்.
திருவள்ளூா் வட்டார வளமையம் சாா்பில், திருவூா் அரசு ஆதிதிராவிடா் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைத்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கலைத்திருவிழா போட்டிக்கு அரசினா் ஆதிதிராவிடா் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மீகாவேல் முன்னிலை வகித்தாா். முன்னதாக செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடா் நல ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை உஷா வரவேற்றாா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவா், ஆதிதிராவிடா் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தூதுவா் சா.அருணன் சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தாா். தண்ணீா்குளம் ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா் வள்ளியம்மாள் ஒருங்கிணைத்தாா்.
இதில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த நடுநிலைப்பள்ளி, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஓவியம், இசை, பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தினா்.
இந்தப் போட்டியில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்கவும் அழைத்துச் செல்லவும் உள்ளனா். அரண்வாயல் , செவ்வாப்பேட்டை திருவூா், தொழுவூா் தண்ணீா்குளம் ஊராட்சிகளை சோ்ந்த தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் போட்டியில் கலந்து கொண்டனா். ஆசிரியா்கள் ராஜலட்சுமி , அனந்தநாயாகி உள்ளிட்டோா் நடுவா்களாக இருந்தனா். அரண்வாயல் குப்பம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் வாசுதேவன் நன்றி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






