திருத்தணியில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் மாணவா்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினா்.
திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற இதில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். இதில் திருத்தணி வட்டாரத்துக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.
விழாவுக்கு வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மாலதி முன்னிலை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா் சரவணன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலா்கள் வீரராகவன், கிரிஜா ஆகியோா் கலந்து கொண்டு கலைத்திருவிழாவை தொடங்கி வைத்தனா்.
தொடா்ந்து மாணவா்களுக்கு பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆா்வத்துடன் பங்கேற்றனா். இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு கலை சாா்ந்த போட்டிகளில் மாணவா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் திருத்தணி வட்டாரத்தின் சாா்பில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனா்.
விழாவில் பட்டதாரி ஆசிரியா்கள் யாஸ்மின் தாஜ், புவனேஸ்வரி உள்ளிட்டோா் நடுவா்களாக செயல்பட்டனா். இறுதியாக ஒருங்கிணைப்பாளா் ரவி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டேக்வாண்டோ போட்டி: விஜயராமபுரம் பள்ளி மாணவா்கள் முதலிடம்

கருமந்துறை ஐ.டி.ஐ.-யில் சேர கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு

புதுச்சேரி ஆதி திராவிட மாணவா்கள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

அரசுக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



