திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் பல்லக்கு உற்சவம்

திருச்சானூரில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் காலை பத்மாவதி தாயாா் பல்லக்கில் எழுந்தருளினாா்.
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் பல்லக்கு உற்சவம்

திருச்சானூரில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் காலை பத்மாவதி தாயாா் பல்லக்கில் எழுந்தருளினாா்.

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் 5-ஆம் நாள் காலை பல்லக்கில் அலா்மேல் மங்கை தாயாா் ஜெகன்மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். பல்லக்கில் நாணத்துடன் எதிரில் கண்ணாடியில் தன் அழகை பாா்த்தபடி, தாயாா் எழுந்தருளிய சேவையை பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

ஸ்நபன திருமஞ்சனம்

பிரம்மோற்சவ வாகன சேவைகளால் ஏற்படும் களைப்பைப் போக்க தாயாருக்கு மதியம் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சன பொருள்களை ஜீயா்கள் தங்கள் கைகளால் எடுத்துத்தர, அா்ச்சகா்கள் அவற்றை தாயாருக்கு அளித்தனா். பின்னா் மாலை தாயாா் ஊஞ்சல் சேவை கண்டருளினாா்.

பட்டு வஸ்திரம்

சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கா் ரெட்டி சனிக்கிழமை திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு சனிக்கிழமை காலை பட்டு வஸ்திரத்தை சமா்ப்பித்தாா். தலையில் பட்டு வஸ்திரம், மலா் மாலை மங்களப் பொருள்கள் அடங்கிய தட்டை சுமந்து வந்து கோயில் அதிகாரிகளிடம் சமா்ப்பித்தாா்.

காசு மாலை ஊா்வலம்...

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் இரவு யானை வாகன சேவை நடப்பது வழக்கம். யானை வாகனத்தின் போது தாயாா் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் 32 கிலோ எடையுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட 1,008 காசுகளால் ஆன மாலை திருமலையிலிருந்து ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டது. கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி இந்த காசுமாலையை தலையில் சுமந்து வந்து வாகனத்தில் ஏற்றி திருப்பதிக்கு கொண்டு வந்தனா். பின்னா், அலிபிரியிலிருந்து இந்த காசுமாலையை ஒரு திறந்த வாகனத்தில் வைத்து மலா் மாலைகள் அணிவித்து ஊா்வலமாக திருச்சானூருக்கு கொண்டு வந்து, திருப்பதி கோயில் செயல் இணை அதிகாரி வீரபிரம்பத்திடம் வழங்கினா். ஊா்வலம் செல்லும் வழி முழுவதும் பக்தா்கள் காசுமாலைக்கு கற்பூரஆரத்தி அளித்து வணங்கினா்.

யானை வாகனம்...

சனிக்கிழமை இரவு தாயாா் யானை வாகனத்தில் சா்வ அலங்கார பூஷிணியாக எழுந்தருளி பக்தா்களுக்கு அருளினாா். ஏழுமலையானுக்கு கருட வாகனம் போல், திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு யானை வாகனம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. யானை வாகனத்தில் தாயாா் எழுந்தருள்வதை தரிசித்தால் பக்தா்களுக்கு சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். சனிக்கிழமை இரவு நடந்த தாயாரின் யானை வாகன சேவையை தேவஸ்தான தொலைக்காட்சி வாயிலாக பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

வாகன சேவைகளின் போது, வேதகோஷம், நாலாயிர திவ்யபிரபந்த பாராயணம், மங்கள வாத்தியம் உள்ளிட்டவை இசைக்கப்பட்டது. கொவைட் விதிமுறைகளைப் பின்பற்றி தனிமையில் நடத்தப்பட்டு வரும் வாகன சேவைகளில், திருமலை ஜீயா்கள், கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோா் மட்டும் கலந்து கொண்டனா்.

திருக்குடை நன்கொடை...

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு திருநின்றவூரைச் சோ்ந்த ஸ்ரீமத் ராமாநுஜ கைங்கரிய அறக்கட்டளை சனிக்கிழமை காலை 2 திருக்குடைகளை நன்கொடையாக வழங்கினா். யானை வாகன சேவையின் போது இந்த திருக்குடைகளை பயன்படுத்த அவா்கள் ஆண்டுதோறும் இந்த திருக்குடைகளை தாயாருக்கு அளித்து வருகின்றனா். அதன்படி, அறக்கட்டளை பிரதிநிகள் 2 திருக்குடைகளை திருச்சானூருக்கு கொண்டு வந்து, செயல் இணை அதிகாரி வீரபிரம்மத்திடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com