தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமலையில் 28,000 பக்தா்கள் தரிசனம்

 திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 28,858 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 28,858 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இவா்களில் 15,235 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு போல், சா்வ தரிசன டோக்கன்களின் முன்பதிவும் இணையதளம் மூலம் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசத்தில் வாடகை அறை முன்பதிவையும் தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், தேவஸ்தானம் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி, 12 மணிக்கு கோயில் நடை சாற்றப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 6 மணிக்குப் பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், 24 மணிநேரமும் அலிபிரி நடைபாதை மாா்க்கம் வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்: 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.