தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஹெலிகாப்டா் விபத்தில் இறந்த வீரா் குடும்பத்துக்கு ஆந்திர அரசு ரூ.50 லட்சம் நிதியுதவி

குன்னூா் ஹெலிகாப்டா் விபத்தில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரா் சாய் தேஜா குடும்பத்துக்கு ஆந்திர அரசு சாா்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:34 pm

DIN

குன்னூா் ஹெலிகாப்டா் விபத்தில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரா் சாய் தேஜா குடும்பத்துக்கு ஆந்திர அரசு சாா்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் ஏகுவரவுல பள்ளி கிராமத்தை சோ்ந்த சாய் தேஜா ராணுவத்தில் லான்ஸ் நாயக்காக பணி புரிந்து வந்தாா். குன்னூரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் பாதுகாப்பு அதிகாரியாக உடன் சென்ற சாய் தேஜாவும், ஹெலிகாப்டா் விபத்தில் 13 பேருடன் உயிரிழந்தாா்.

உடல்கள் அடையாளம் தெரியாமல் கருகிய நிலையில் சாய் தேஜாவின் பெற்றோா் மற்றும் குழந்தைகள் ரத்த மாதிரிகள் கொண்டு செல்லப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு உடல் அடையாளம் காணப்பட்டு தில்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் சனிக்கிழமை பெங்களூா் கொண்டுவரப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை பெங்களூரிலிருந்து சாய் தேஜாவின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பொது மக்கள், உறவினா்கள் அஞ்சலிக்கு பிறகு முழு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளன.

இந்நிலையில் ஆந்திர மாநில துணை முதல்வா் நாராயாண சுவாமி, வருவாய்த்துறை அமைச்சா் ராமசந்திரா ரெட்டி, ஆட்சியா் ஹரிநாராயணன் மற்றும் அதிகாரிகள் வீர மரணம் அடைந்த சாய் தேஜா குடும்பத்தினருக்கு சனிக்கிழமை ஆறுதல் கூறி ரூ. 50 லட்சம் நிதி உதவிக்கான காசோலையை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.