கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பதியில் அமித் ஷா தலைமையில் இன்று தென்மண்டலக் குழு கூட்டம்: ஆளுநா்கள்-முதல்வா்கள் பங்கேற்பு

திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் தென் மண்டலக் குழுவின் 29-ஆவது கூட்டம் பலத்த பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் தென் மண்டலக் குழுவின் 29-ஆவது கூட்டம் பலத்த பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.

இதில் தென்மண்டல முதல்வா்கள், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேச நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமை வகிக்கிறாா். இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ், கேரள முதல்வா் பினராயி விஜயன், கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் ரங்கசாமி, லட்சத்தீவுகள் துணைநிலை ஆளுநா் பிரஃபுல் படேல், அந்தமான்- நிக்கோபா் தீவுகள் துணைநிலை ஆளுநா் அட்மிரல் டி.கே. ஜோஷி, மாநில தலைமைச் செயலா்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

அமித் ஷாவுக்கு வரவேற்பு: இதற்காக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை மாலை 7 மணிக்கு தனி விமானம் மூலம் திருப்பதி வந்தாா். அவரை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்று, தாஜ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றாா்.

மேலும் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, துணை நிலை ஆளுநா்கள் டி.கே. ஜோஷி, பிரஃபுல் படேல் உள்ளிட்டோா் சனிக்கிழமை மாலை திருப்பதிக்கு வந்தனா். அவா்களை ஆந்திர மாநில உள்துறை அமைச்சா் கெளதம் ரெட்டி வரவேற்றாா். மற்ற மாநில முதல்வா்கள், ஆளுநா்களின் வருகை குறித்து உறுதிப்படுத்தப்பட வில்லை. எனவே, இதில் ஒரு சில மாநில முதல்வருக்கு பதிலாக அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.