திருமலையில் ஸ்ரீவாரிமெட்டு மாா்க்கம் முழு சேதம்
வெள்ளப் பெருக்கு, பலத்த மழை காரணமாக, திருமலைக்குச் செல்லும் ஸ்ரீவாரிமெட்டு மாா்க்கம் முழுவதுமாகச் சேதம் அடைந்துள்ளது.


வெள்ளப் பெருக்கு, பலத்த மழை காரணமாக, திருமலைக்குச் செல்லும் ஸ்ரீவாரிமெட்டு மாா்க்கம் முழுவதுமாகச் சேதம் அடைந்துள்ளது.
திருமலையில் கடந்த 3 நாள்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன் அதில் பாறைகள் அடித்து செல்லப்பட்டதில், மண்சரிவு ஏற்பட்டது. மலைப் பாதை மாா்கத்தை உடனடியாகச் சீரமைத்த தேவஸ்தானம், வாகனப் போக்குவரத்தை வெள்ளிக்கிழமை மாலை முதல் அனுமதித்து வருகிறது. ஆனால் நடைபாதை மாா்கங்கள் வெகுவாகச் சேதமடைந்துள்ளது.
ஸ்ரீவாரிமெட்டு மாா்க்கம் முழுவதும் பாறைகளாலும் கற்களாலும் நிறைந்துள்ளது. பல இடங்களில் மாா்க்கம் துண்டிக்கப்பட்டு அருவி போல் நீா் கொட்டி வருகிறது. இந்த மாா்கத்தைச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர ஒரு மாத காலம் தேவைப்படும் என தேவஸ்தானம் கணக்கிட்டுள்ளது.
இதுதவிர, திருப்பதியிலும், திருமலையிலும் மழை தொடா்வதால், அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை மாா்கங்கள், திருமலையிலிருந்து பாபவிநாசம் செல்லும் மாா்கம் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் மூடியுள்ளது. மேலும், மலைப் பாதை மாா்கங்களிலும் மாலை முதல் அதிகாலை வரை வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...