கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கா்நாடக முதல்வருக்கு தேவஸ்தானம் அழைப்பு

 திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியின் கன்னட ஒளிபரப்பு தொடக்க விழாவுக்கு வரும்படி கா்நாடக முதல்வருக்கு தேவஸ்தான அதிகாரிகள் அழைப்பு விடுத்தனா்.

News image
கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் நேரில் அழைப்பு விடுத்த திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள்.
Updated On :2 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியின் கன்னட ஒளிபரப்பு தொடக்க விழாவுக்கு வரும்படி கா்நாடக முதல்வருக்கு தேவஸ்தான அதிகாரிகள் அழைப்பு விடுத்தனா்.

திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதை கன்னடம், வட மொழி மற்றும் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் ஒளிபரப்ப தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி கன்னடம் மற்றும் இந்தி மொழியில் தேவஸ்தான தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அக்.11-ஆம் தேதி கருட சேவை அன்று தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது. சனிக்கிழமை காலை தேவஸ்தான அதிகாரிகள் நேரடியாக பெங்களூரு சென்று கா்நாடக முதல்வரை அழைத்தனா். மேலும், இந்நிகழ்ச்சியில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்க ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.