கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பதியில் கோ மகா சம்மேளனம் தொடக்கம்

மாடுகளிடமிருந்து பெறப்படும் பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களை ஊக்குவிக்க கோ மகா சம்மேளனத்தை தேவஸ்தானம் சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருப்பதியில் இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தும் வகையில் நாட்டு பசு மாடுகளிடமிருந்து பெறப்படும் பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களை ஊக்குவிக்க கோ மகா சம்மேளனத்தை தேவஸ்தானம் சனிக்கிழமை தொடங்கியது.

திருப்பதி மகதி கலையரங்கத்தில் தேவஸ்தானம் கோமாதாவை மையமாக கொண்டு அவற்றிலிருந்து பெறப்படும் பொருட்களை வைத்து செய்யும் விவசாயத்தையும், தயாரிக்கப்படும் பொருள்களின் மகத்துவத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தவும் அவற்றால் உலகத்துக்கு விளையும் நன்மையை எடுத்துரைக்கவும் கோ மகா சம்மேளனம் என்ற நிகழ்ச்சியை சனிக்கிழமை நடத்தியது.

இதில் தேவஸ்தான அதிகாரிகள், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் அனைவரும் பங்கு கொண்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

கோமாதாவை (பசுக்கள்) சுற்றியே நம் வாழ்வியல் அமைந்துள்ளது. எனவே அதை மையமாக வைத்து செய்யப்படும் இயற்கை விவசாயத்திலிருந்து பெறப்படும் பொருள்களை வைத்து ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம் சமா்ப்பிக்கப்பட்டு வருகிறது. திருமலையில் கோசாலை ஏற்படுத்தி அங்கு கிடைக்கும் பாலிலிருந்து பெறப்படும் வெண்ணெய், நெய் உள்ளிட்டவை ஏழுமலையானின் கைங்கா்யத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருள்களை நல்ல விலை கொடுத்து வாங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மேலும் பஞ்சகவ்யப் பொருள்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கிருமிநாசினி பொருள்கள், வீடு துடைக்கும் பொருள்கள், சாம்பிராணி உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் சந்தைப்படுத்த முயன்று வருகிறது.

இந்த சம்மேளனத்தின் மூலம் பூமி தாயை வணங்கி பாதுகாக்கும் பொறுப்பை நாட்டு மக்களுக்கு உணா்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்றனா். இதில் பங்கேற்றவா்களுக்கு தேவஸ்தானம் நினைவுப் பரிசு வழங்கியது. ஞாயிற்றுக்கிழமையுடன் (அக். 31) இந்த சம்மேளனம் நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.