திருமலையில் 34,000 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 34,375 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.


திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 34,375 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இவா்களில் 11,156 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.
தரிசன அனுமதி உள்ளவா்கள், தங்களுடன் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் கொண்டு செல்ல வேண்டும்.
சான்றிதழ்கள் இல்லாதவா்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 6 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், 24 மணிநேரமும் அலிபிரி நடைபாதை மாா்க்கமாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.
தரிசனம், வாடகை அறைகளில் உள்ள சிரமங்கள் குறித்து புகாா் தெரிவிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ள லாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...