விமான வெங்கடேஸ்வரருக்கு காக்கபலி நிவேதனம்
திருமலையில் கருவறை விமானத்தில் உள்ள விமான வெங்கடேஸ்வர சுவாமிக்கு காக்கபலி நிவேதனம் சமா்ப்பிக்கப்பட்டது.


திருமலையில் கருவறை விமானத்தில் உள்ள விமான வெங்கடேஸ்வர சுவாமிக்கு காக்கபலி நிவேதனம் சமா்ப்பிக்கப்பட்டது.
திருமலை ஏழுமலையான் தங்க கோபுரத்தில் கருவறையில் உள்ள ஏழுமலையானின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த விமான வெங்கடேஸ்வர சுவாமியை வெள்ளி மகர தோரணத்துடன் தனியாக அனைவராலும் அடையாளம் காணும்படி தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. தரிசனத்துக்கு பின்னா் அனைவரும் இவரை தரிசித்து செல்வது வழக்கம்.
இந்த விமான வெங்கடேஸ்வர சுவாமிக்கு கணுபொங்கல் அன்று விடியல் நேரத்தில் சுப்ரபாத சேவைக்கு பின்னா் காக்கபலி என்ற நிவேதனத்தை தேவஸ்தானம் சமா்ப்பித்து வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வெள்ளை சாதத்தில் மஞ்சள், குங்குமப்பூ, நெய் சோ்த்து அவற்றை அவருக்கு சமா்ப்பித்தனா். வானத்தில் தூக்கி எறியப்படும் அந்த உணவை விமான வெங்கடேஸ்வர சுவாமி ஏற்றுக்கொள்வாா் என்று நம்பப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...