திருமலை ஏழுமலையானை த வெள்ளிக்கிழமை பக்தா்கள் 20 மணி நேரம் காத்திருந்த தரிசித்தனா்.
தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து பக்தா்களை முன்பதிவு டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு நேரடியாக அனுப்பி வருகிறது. ஆதாா் அட்டையை காண்பித்து திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் அவா்கள் தா்ம தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகளை கடந்து வெளியில் ஆஸ்தான மண்டபம் அருகே வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இவா்களின், தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆனது. ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்களுக்கு 2 முதல் 3 மணி நேரம் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை 68,873 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். இவா்களில் 38,952 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.
தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை முதல் 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!
ஜூன் 18-இல் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநருக்கான வேலைவாய்ப்பு முகாம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
மகளிருக்கு இலவச பேருந்து சேவை! கேரள முதல்வர் தொடக்கி வைத்தார்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



